திருப்பூர்: பல்லடம் அருகே மின்சாரத்தை வீணடித்ததாகக் கூறி பள்ளி தாளாளர் தாக்கியதில் மாணவனின் கைவிரல் சவ்வு கிழிந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மங்கலம், சின்னப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மகன் சபரீஷ் உதயகிருஷ்ணன் (12). இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பல்லடம் பூமலூர் அருகேயுள்ள பள்ளிபாளையம், வள்ளலாளர் குருகுல மேல்நிலைப் பள்ளியில், அங்கேயே விடுதியில் தங்கிப் படிக்கும் வகையில் ஏழாம் வகுப்பு சேர்த்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி விடுதியில் உள்ள உணவகத்தில் விளக்குகள் மற்றும் மின்விசிறி ஓடி கொண்டிருந்ததால், பள்ளி தாளாளர் ராமச்சந்திரன், மின்சாரத்தை வீணடிப்பதாகக் கூறி சபரீஷை பெரம்பினால் தலை, கைகள் போன்ற பகுதிகளில் தாக்கியுள்ளார்.
இதனால், மாணவனுக்கு கை விரலில் உள்ள சவ்வு கிழிந்து விட்டது. தவிர தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சபரீஷை பார்க்க அவரது தந்தை விடுதிக்கு சென்ற போது, தாளாளர் தன்னை தாக்கியது குறித்தும், கை விரல் வலி அதிகமாக உள்ளதாகவும் சபரீஷ் அழுதபடியே கூறியுள்ளார். இதனால், மன வேதனை அடைந்த செந்தில்குமார் தனது மகனின் மாற்றுச் சான்றிதழை தாளாளரிடம் கேட்டுள்ளார். ஆனால், தாளாளர் தர மறுத்துவிட்டார்.

இதனிடையே, தனது மகனுக்கு கை விரலில் ஏதாவது பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் கோவையில் உள்ள சி.எஸ்.ஆர் மருத்துவமனையில் எக்ஸ்ரே மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.
அதில், சபரீஷ் உதயகிருஷ்ணனுக்கு கைவிரலில் உள்ள சவ்வு கிழிந்தது தெரிய வந்தது.
மேலும், தலையிலும் அடிபட்டுள்ளதால் அவரை மூன்று மாதங்களுக்குக் கவனமாகவும், குளிர்ந்த இடத்திலும் வைத்திருக்க வேண்டாம் என்று மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, தனது மகனை தாக்கிய பள்ளியின் தாளாளர் ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் சபரீஷ் உதயகிருஷ்ணனின் தந்தை புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், வீட்டில் சூழ்நிலை சரியில்லாத காரணத்தில்தான் சபரீஷை விடுதியில் சேர்த்து படிக்க வைத்தேன். ஆனால், பள்ளி தாளாளரின் செயல்பாட்டால் எனது மகன் உயிரே கேள்வி குறியாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, வள்ளலாளர் குருகுல பள்ளியின் தாளாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.