இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்: கோவை மாநகர காவல்துறை விழிப்புணர்வு விளம்பரம்

கோவை: இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என கோவை மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை: இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என கோவை மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவை தமிழக மக்கள் பெரும்பாலும் கடைபிடிப்பதில்லை. 

இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை கடைபிடிக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது இருசக்கர வாகன ஓட்டுநர் மட்டுமல்லாது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டினால் மற்றும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றால், மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மெட் அணிவது உயிருக்குப் பாதுகாப்பானது, இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர். 

பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...