மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.

மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. 

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாக உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபாகர் கிருஷ்ணகிரிக்கும், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த வீர ராகவ ராவ் ராமநாதபுரத்திற்கும், சென்னை ஆட்சியராக இருந்த அன்புசெல்வன் கடலூருக்கும், கிருஷ்ணகிரி ஆட்சியராக இருந்த கதிரவன் ஈரோட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் ஆட்சியர் நடராஜன் மதுரைக்கும், அண்ணா தொழிலக நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்த சண்முக சுந்தரம் சென்னை ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 

பள்ளிகல்வித்துறை செயலாளர் உதய சந்திரன் தொல்லியல் துறைக்கும், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர், வேலைவாய்ப்பு துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல, ஐ.ஏ.எஸ்., அசோக் டாங்ரே குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, பல முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...