சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி, வாஜ்பாய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சரமான எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தி.மு.க., தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் மறைவுக்கும், கேரள, கர்நாடக வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதற்கு தமிழக அரசிற்கும், உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக நடத்திய நிர்வாகிகளுக்குப் பாராட்டு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஈ.வே.ரா., அண்ணாதுரை, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.