கோவை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் எதிரொலியாக கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்லக்கூடிய காய்கறிகள் கடந்த வாரம் முதல் தேக்கமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.

சாய்பாபா காலனியில் உள்ள புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் செல்கின்றன. இங்கு 112 மொத்த காய்கறி விற்பனை நிலையம் அமைந்துள்ளது. தினமும் 250 லாரிகளில் காய்கறிகள் கேரளாவிற்கும், 50 லாரிகளில் கோவை மற்றும் பிற மாவட்டங்களுக்கும் காய்கறிகள் செல்வது வழக்கம்.
ஆனால், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கடந்த வாரம் முழுவதும் காய்கறிகள் அங்கு செல்லாமல் தேக்கமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது.

தற்போது கேரளாவில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியதை அடுத்து காய்கறிகள் தேக்கம் அடையாமல் செல்கின்றன. குறிப்பாக ஓணம் பண்டிகை ஒட்டி பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு போன்றவை அதிக அளவில் கேரளாவிற்கு செல்கின்றன.
அதே போல் விலையும் விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் இருப்பதால் தற்போது கோவை பகுதி விவசாயிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 30 முதல் 35 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 20 முதல் 25 வரையிலும், கேரட் கிலோ ரூபாய் 50 முதல் 55 வரையிலும், உருளைக்கிழங்கு விலை ரூபாய் 20 முதல் 30 வரையிலும் கேரளாவிற்கு சென்றுள்ளன.
இது குறித்து எம்.ஜி.ஆர். மார்க்கெட் காய்கறிகள் மொத்த விற்பனையாளர் எஸ். பசீர் கூறுகையில், "தற்போது மார்க்கெட்டில் இருந்து தினமும் 300 லாரிகள் காய்கறிகளுடன் கேரளாவுக்கு செல்கிறது. 50 லாரிகள் உள்ளூர் வணிகத்திற்கும் செல்கின்றன. காய்கறிகள் விலை சற்று விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளன. கடந்த சில நாட்களாக காய்கறிகள் தேக்கம் அடைந்த நிலையில் தற்போது எந்த தேக்கமும் இல்லாமல் செல்கின்றன." என்றார்.