நீலகிரி: ஊட்டி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்துள்ள நிலையில், மழை வெள்ளம் காரணமாக வெளியூர்களுக்கு முழுமையாக விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தபடியாக, காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. ஊட்டி, முத்தோரை, பாலாடா, அணிக்கொரை, ஆடாசோலை, குருத்துகுளி மற்றும் நஞ்சநா மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில், காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட், உருளைக் கிழங்கு மற்றும் பீன்ஸ் மற்றும் கீரை வகைகள், அறுவடை செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் மண்டிகளிலும், ஊட்டி மார்க்கெட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டு செல்ல செலவினம் அதிகம் என்பதால், கிராமப்புற விவசாயிகள், ஊட்டி மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சிலநாட்களாக இங்கு மழை பெய்துவந்ததால், ஊட்டி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்திருந்தது. கடந்த இரு நாட்களாக, மழை குறைந்த நிலையில் காய்கறி வரத்து கணிசமாக உயர்ந்தது. ஊட்டி மார்க்கெட்டில் இருந்து, அதிகளவிலான காய்கறி, கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மழை காரணமாக இவ்விரு மாநிலங்கள் சகஜ நிலைக்குத் திரும்பவில்லை.

லாரி உள்ளிட்ட வாகனங்கள் அங்கு சென்று வருவதில் சிக்கல் அதிகரித்துள்ளது. இதனால், ஊட்டி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்திருந்தாலும், வெளியூர்களுக்கு முழுமையாக விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "மழை ஓய்ந்துள்ள நிலையில், ஊட்டி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் பழைய நிலைக்குத் திரும்பாததால், காய்கறியை முழுமையாக விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றனர்.