அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது : திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை சந்திப்பதற்கான வியூகம் அமைக்கப்பதற்காக அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை சந்திப்பதற்கான வியூகம் அமைக்கப்பதற்காக அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது. 

அ.தி.மு.க., தலைமை செயற்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கின்றனர்.

அ.தி.மு.க. செயற்குழு சென்னையில் 20-ந் தேதி நடக்க இருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக செயற்குழு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு இருந்த அழைப்பிதழ்களை கொண்டு வரலாம் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, கட்சியில் காலியாக இருக்கும் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி, மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளது. எனவே இந்த இடைத்தேர்தலில் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம்...? தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம்..? என்பது குறித்து செயற்குழு உறுப்பினர்களிடம் கட்சி தலைமை விவாதித்து, வியூகம் அமைக்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...