முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஓடும் அதிக தண்ணீரால் மேலணையில் உள்ள 8 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஓடும் அதிக தண்ணீரால் மேலணையில் உள்ள 8 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில் உள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.



இதனால், ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் மேலும் சில மதகுகள் உடையும் நிலையில் உள்ளன. மதகு உடைப்பை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அணைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் வந்து அணையை பார்வையிட்டார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...