வெள்ளலூர் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி : பக்ரீத் பண்டிகை கொண்டாடச் சென்ற போது நேர்ந்த சோகம்

கோவை: வெள்ளலூர் குளத்தில் குளிக்கச் சென்ற போது மூழ்கி பலியான சிறுவனை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.


கோவை: வெள்ளலூர் குளத்தில் குளிக்கச் சென்ற போது மூழ்கி பலியான சிறுவனை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். 

வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகன் ஃபாசில் ரகுமான் (17). கிரஸ்ட் தி கிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்த இவர் பக்ரீத் தொழுகையை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் வெள்ளலூர் குளத்திற்கு குளிக்கச் சென்றார்.



தொடர் மழை காரணமாக வெள்ளலூர் குளம் நிரம்பி இருந்தது. 12 வருடங்களுக்குப் பிறகு வெள்ளலூர் குளம் நிரம்பியுள்ளதால், குளத்தில் யாரும் இறங்க வேண்டாம் என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



இந்த சூழலில், குளத்தில் இறங்கிய ஃபாசில் ரகுமான், நீரில் மூழ்கினார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் நீரில் மூழ்கியவரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து, நீரில் மூழ்கிய ஃபாசில் ரகுமான் சடலமாக மீட்கப்பட்டார். அங்கு திரண்டிருந்த ஃபாசில் ரகுமானின் உறவினர்கள் அவரது உடலை பார்த்தவுடன் கதறி அழுதனர்.

சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...