கோவை: கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெயில் நிலவும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு. சின்கோனா, சின்னகல்லாறு, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 34 முதல் 35 டிகிரி செல்சியஸ்யாகவும், இரவு நேர வெப்ப நிலை 24 முதல் 25 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது.
இந்த நான்கு நாட்கள் வெயில் பதிவாகும் என்பதால் விவசாயிகள் அடுத்து மழை வருவதற்குள் தேவையான பணிகளை செய்து கொள்வது நல்லது." என்றார்.