கோவை: கோவை: வன ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி கோவை வன கண்காணிப்பாளர் கலாமணியை இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை: வன ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி கோவை வன கண்காணிப்பாளர் கலாமணியை இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை ஊழியர்கள் சங்கத்தினர் இது தொடர்பாக மாவட்ட வன அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில், சக வன பணியாளர்களை கலாமணி தரக்குறைவாக நடத்துவதாகவும், அவர் சட்டத்துக்கு புறம்பாக லஞ்சம் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், வனத்துறையில் பணி ஒதுக்கீடு செய்ய பணம் பெறுவதாகவும் கூறி அவரை இடமாற்றம் செய்ய கோரியுள்ளனர்.
இந்த சூழலில், கலாமணி மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக கலாமணியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலியல் தொடர்பான புகார் எழுந்ததாகவும், அதனை விசாரிக்கும் கமிட்டியில் கலாமணி இருப்பதாலுமே இது போன்ற அவப்பெயர் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.