திருப்பூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையானது இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, திருப்பூரிலும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

காங்கேயம் சாலையில் உள்ள பெரிய பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்தனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும் பக்ரீத் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.