நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ரோஷ்மவுன்ட் பகுதியைச் சேர்ந்தவர் பாபு என்கிற கோபால்(42). இவரது மனைவி மஞ்சுளா (36). கடந்த 2013-ம் ஆண்டு மஞ்சுளா-விடம் பாபு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து மஞ்சுளாவின் தனத்தை மரியசாமி உதகை ஜி1 காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாபு அவரது தாயார் உமாதேவி மற்றும் சகோதரிகளான சங்கீதா, கவிதா ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று (புதன்கிழமை) வழங்கப்பட்டது. அதில், கைது செய்யப்பட்ட நால்வருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்..