வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் ரூ. 220 கோடி சேதம்

மழை மற்றும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் ரூ. 220 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை மற்றும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் ரூ. 220 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கேரள மாநிலத்தையே புரட்டிப் போட்டி கனமழை மற்றும் வெள்ளம், கொச்சி விமான நிலையத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக விமான நிலையம் மூடியே கிடக்கிறது. அங்கு இன்னும் தண்ணீர் வடியாததால், 26-ம் தேதி வரை விமான நிலையத்தைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் ரூ. 220 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கொச்சி விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில், பெரியாறு அணையில் இருந்து வெளியேறிய உபரி நீரினால் சேதமடைந்த 2.5 கிலோ மீட்டர் நீளமுள்ள விமான நிலைய சுற்றுப்புறச் சுவர், ஓடுபாதை, ஓடுபாதை விளக்குகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் நிறுத்துமிடங்கள், டாக்சி நிறுத்துமிடம், கடைகள், எலக்ட்டிரானிக் பொருட்கள் உள்ளிட்டவை சீர்செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...