கோவையில் முறையான சந்தா செலுத்தாத பார்களுக்கு சீல் : கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கோவை: கோவையில் அரசுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 76 டாஸ்மாக் பார்களுக்கு கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.


கோவை: கோவையில் அரசுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 76 டாஸ்மாக் பார்களுக்கு கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகின்றன. மதுபான கடைகளுடன் இயங்கி வரும் இந்த பார்கள் (மதுபானக் கூடங்கள்) மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பார்கள் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாகக் கட்டணத்தை செலுத்தாமல் இருந்து வந்துள்ளன. 



இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனின் உத்தரவின் பேரில், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் முறைகேடாக செயல்பட்டு வந்த சுமார் 76 டாஸ்மாக் பார்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றிற்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட காந்திபுரம் பகுதியிலுள்ள டாஸ்மாக் பாருக்கு கலால் வரித்துறை துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், "கோவை மாவட்டம் முழுவதும் இதுபோன்று முறைகேடாக இயங்கி வரும் மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்க 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அக்குழுவினர் இன்று ஒரே நாளில் அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை மூன்று தினங்களுக்குள் அபராத தொகையுடன் சேர்த்து செலுத்தும் பட்சத்தில், தொடர்ந்து பார்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும்," என்றார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...