நாமக்கல் அருகே 4 வயது குழந்தை ஆற்றில் விழுந்த சம்பவம்: குடும்பத்துடன் செல்பி எடுக்க முயன்ற போது விபரீதம்

நாமக்கல்: காவிரி ஆற்றில் குடும்பத்துடன் செல்பி எடுக்க முயன்ற போது, பெற்றோரின் கையில் இருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்: காவிரி ஆற்றில் குடும்பத்துடன் செல்பி எடுக்க முயன்ற போது, பெற்றோரின் கையில் இருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் ஐ.பி.ஜி., நகரை சேர்ந்தவர் பாபு. ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருபவரான இவருக்கும், மனைவி கஸ்தூரி என்பவருக்கும் 4 வயதில் தன்வந்து என்ற மகன் இருந்தார். மகன் தன்வந்து நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார். 



இந்நிலையில், சிறுவன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், பாபு தனது குடும்பத்துடன் சென்று பரமத்தி வேலூரில் உள்ள காவிரி ஆற்றுப் பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து, இன்று தன்வந்த் பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார்.

தன்னை காவேரி ஆற்றிக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என அடம்பிடித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, தன்வந்தை, அவரது தந்தை காரில் நாமக்கல் மோகனூர் - வாங்கல் காவிரி பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாய்ந்து செல்லும் நீரை ரசித்துக் கொண்டிருந்தனர். 

மேலும், செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக தன்வந்த் ஆற்றில் தவறி விழுந்ததையடுத்து பதறி போன பாபு மோகனூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார் அதன்பேரில் போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தன்வந்தை தேடி பார்த்தனர்.

ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் தன்வந்தை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளப்பெருக்கால் மாயனூர் தடுப்பணையில் தன்வந்த் கிடைக்க வாய்ப்புள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர். 

காவேரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் செல்பி எடுக்கத் தடை நீடித்த போதிலும், நாமக்கல் மோகனூர் காவேரி ஆற்றின் பாலத்தின் மீது செல்பி எடுத்தபோது குழந்தை ஆற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...