டெபாசிட் மற்றும் கடன் வழங்கலில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் - அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பில் தீர்மானம்

கோவை: அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் பயிற்சிப்பட்டறை கோவை எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் இன்று நடைபெற்றது.

கோவை: அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் பயிற்சிப்பட்டறை கோவை எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் இன்று நடைபெற்றது.

வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மூத்த தலைவர்கள் செல்வராஜ், ரகுராமன், ராஜவேல், பார்த்தசாரதி ராகவேந்திரன் ஆகியோர் இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு பேசினர்.

இதன் பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காப்பீடு, மியூச்சுவல் பண்டு முதலிய துறைகளில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதை மாற்றி வங்கிகளின் ஆதாரப் பணிகளாகிய டெபாசிட் மற்றும் கடன் வழங்கலில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். காப்பீடு போன்ற மூன்றாம் நபர் சேவைகளில் வாடிக்கையாளர் நலம் காக்கப்படவேண்டும். 

வர்த்தகத்திற்கான ஊக்கிகளாக உள்ள வெளிநாட்டு சுற்றுலா போன்றவை மறுபரிசீலனை செய்யப்படவேண்டும். வங்கி அதிகாரிகள் சந்திக்கும் இடர்கள், பணிச்சுமை, பொறுப்புகள் இவற்றுக்கேற்ப மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரைக்கேற்ப ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். நாட்டின் ஆதார சேவைக்களமாக விளங்கும் பொதுத்துறை வங்கிகளை லாபத்துடன் செயல்பட வைக்கவும், எளியவர்களின் வாழ்க்கைத்தரத்தினை வங்கித் திட்டங்களின் மூலம் உயர்த்தவும் அதிகாரிகள் கூட்டமைப்பு முழு அர்ப்பணிப்பு செய்ய வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...