சென்னை : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக பிளஸ்-2 தேர்வு எழுத தமிழக பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இதுவரை பள்ளி இறுதி பொதுத்தேர்வை எழுதித்தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக பிளஸ் 2 தேர்வை, தனித்தேர்வராக எழுத இயலும் என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது பிளஸ்-1 தேர்வும் அரசு பொதுத்தேர்வாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக பிளஸ்-2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது. அவர்கள் பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் தான், பிளஸ்-2 தேர்வை எழுத முடியும், என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.