கோவை: புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி கோவையில் தேசிய பஞ்சாலை கழக ஊழியர்கள் காதில் பூ வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் 7 பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 5 பஞ்சாலைகள் கோவையில் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு அமல்படுத்த வேண்டிய நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி ஊழியர்கள் நேற்று (திங்கட்கிழமை) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரண்டாவது நாளாக சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றன. இதில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
இந்த சூழலில், புதிய ஊதிய ஒப்பந்தம், பஞ்சப்படி, வீட்டு வாடகை படி, பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு, தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்குதல், இரவில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்புத் தொகை உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஸ்டென்ஸ் மில் முன்பு ஊழியர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.