வால்பாறை: வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வால்பாறை வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா, ஸ்டேன்மோர் ஆத்துமட்டம், காமராஜர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்று வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.
வால்பாறை: வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வால்பாறை வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா, ஸ்டேன்மோர் ஆத்துமட்டம், காமராஜர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்று வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.
சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொருட்கள் மற்றும் உடமைமைகள் சேதமடைந்து. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் முகாம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வந்தது.

தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து மூன்று அடி குறைவாக உள்ளது. மழை சற்று குறைந்ததால் முகாமில் உள்ள மக்கள் அவர்களது வீட்டிற்குச் சென்றுள்ளார்கள். மேலும், கடந்த நாட்களில் பெய்த கன மழையினால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் உள்ள எரிவாயு நிரப்பும் டேங்க் பகுதியில் மழை வெள்ளம் புகுந்ததால் எரிவாயு நிரப்ப முடியாமல் கடந்த ஐந்து நாட்களாக வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து செல்லாத நிலையில் மினி வேன்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்லவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அதேபோல் பொள்ளாச்சி-வால்பாறை செல்லும் பிரதான சாலையான அட்டகட்டி பகுதியில் 9-வது மற்றும் 2-வது கொண்டை ஊசி வளைவு, ஓரிரு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டும் ஓரிரு பகுதிகளில் சாலை விரிசல் ஏற்பட்டுள்ளதாலும் கன ரக வாகனங்கள், மற்றும் லாரிகள் செல்ல முடியாததால் வால்பாறையில் அத்தியாவசிய பொருட்களுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.