உண்டியலில் சேர்த்த பணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக அளித்த ஒன்றாம் வகுப்பு மாணவி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி, உண்டியலில் சேகரித்து வைத்த, 3,000 ரூபாயை கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அளித்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி, உண்டியலில் சேகரித்து வைத்த, 3,000 ரூபாயை கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அளித்தார்.

கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட பேரிடருக்கு பல்வேறு அமைப்பினரும், மாநிலங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற நிவாரண தொகையையும், பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அடுத்துள்ள பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி பாத்திமா தான் சேகரித்த பணத்தை நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டாக உண்டியலில் சேகரித்து வைத்த, 3,000 ரூபாயை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உண்டியலுடன் நேற்று நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்தார். தந்தையுடன் வந்த பாத்திமா சம்மந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து அந்த பணத்தை கொடுத்தார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...