கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால், கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, குட்டித் தீவு போல காட்சியளிக்கிறது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை மற்றும் வெள்ள பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர். இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
மாநிலத்தையே புரட்டிப் போட்ட இந்த வெள்ள பாதிப்பை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
