நிவாரணப் பொருளாக காண்டம் வேணுமா...? கேலியாக பேசிய கேரள மாநிலத்தவர் பணியிலிருந்து நீக்கம்

கேரளா: கேரளாவுக்கு நிவாரண உதவி கேட்ட சமூக வலைதள பதிவில், காண்டம் வாங்கித் தரட்டுமா என்று கேட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ஊழியரைப் பணியில் இருந்து ஓமன் நாட்டு நிறுவனம் நீக்கியுள்ளது.

கேரளா: கேரளாவுக்கு நிவாரண உதவி கேட்ட சமூக வலைதள பதிவில், காண்டம் வாங்கித் தரட்டுமா என்று கேட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ஊழியரைப் பணியில் இருந்து ஓமன் நாட்டு நிறுவனம் நீக்கியுள்ளது. 

கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் கேரளா மாநிலம் ஸ்தம்பித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளனர். மேலும், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கேரளாவிற்காக உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஓமன் நாட்டில் பணிபுரிந்து வரும், ராகுல் புதலத்து என்பவர் தனது பதிவில் நிவாரணப் பொருளாக காண்டம் வேணுமா..? எனக் கேட்டுள்ளார். சொந்த மாநில மக்களின் துயரத்தைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை கிண்டல் செய்யும் வகையிலான அவரது பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தனது பதிவுக்கு மன்னிப்பு கேட்டார். மேலும், அந்த பதிவு இட்டபோது தான் போதையில் இருந்ததாகவும் விளக்கமளித்தார்.

இந்நிலையில், சொந்த மாநில மக்களின் துயரத்தை புரிந்து கொள்ளாமல், ஏளனமாக கருத்து பதிவிட்டிருந்த ராகுல் புதலத்தை பணியில் இருந்து நீக்கி ஓமன் நாட்டு நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, அவர் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு திரும்ப இருக்கிறார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...