ஆனைகட்டி அருகே அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்

கோவை : விவசாயப் பயிர்களையும், வீடுகளை சேதப்படுத்தி வரும் ஒற்றைக் காட்டுயானை 'சின்னத் தம்பி'யை வனப்பகுதிகளில் விரட்டக் கோரி கோவை ஆனைகட்டி மலைக் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை :  விவசாயப் பயிர்களையும், வீடுகளை சேதப்படுத்தி வரும் ஒற்றைக் காட்டுயானை 'சின்னத் தம்பி'யை வனப்பகுதிகளில் விரட்டக் கோரி  கோவை ஆனைகட்டி மலைக் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆனைகட்டி மலை கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாகப் பயிர்களையும், வீடுகளையும் ஒற்றை யானை சேதப்படுத்தி வருகிறது. 'சின்னத்தம்பி' என கிராம மக்களால் அழைக்கப்படும் இந்தக் காட்டு யானையை மயக்க ஊசி போட்டு, கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுத்திக்கு கொண்டு சென்றுவிட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று காலை கொண்டனூர், கொண்டனூர் புதூர், பனப்பள்ளி, கண்டிவழி, ஆலமரம் மேடு பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் மக்கள் ஆனைகட்டி பிரதான சாலையான ஆலமரம் மேடு சந்திப்பில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்து வந்த வனத்துறையினர், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, நீண்ட நேரத்திற்கு வனப் பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர், வனத்துறையின் மேல் அதிகாரிகளிடம் சூழ்நிலையை பற்றி எடுத்துக் கூறி 'சின்ன தம்பி' யானையை வனப்பகுதிக்குள் விரட்ட தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதை ஏற்று விவசாயிகள் மற்றும் மக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆனைகட்டி ஆலமரம் மேடு பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...