முதியோர் உதவித் தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாக மதுக்கரை ஒன்றிய மக்கள் புகார்

கோவை: முதியோர் உதவி தொகை வழங்க பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக மதுக்கரை ஒன்றிய பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.


கோவை: முதியோர் உதவி தொகை வழங்க பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக மதுக்கரை ஒன்றிய பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். 

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று மதுக்கரை ஒன்றியதிற்கு உட்பட்ட குமிட்டிபதி, ரங்கசமுத்திரம், காளியாபுரம், மயிலாம்பாறை, எட்டிமடை பேரூராட்சி, சாவடி பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் முதியோர் உதவித் தொகை கோரி கோவை மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரைக்கும் அவர்கள் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், முதியோர் உதவி தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது :- முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாத சூழலில் அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொகையும் கிடைக்கப் பெறாமல் சிரமப்படுகின்றனர். மேலும், குமிட்டிபதி பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு கட்டி தரப்பட்ட தொகுப்பு வீடுகளில் 110 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சுமார் 14 வீடுகள் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. பழைய தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு, புதிதாகக் கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...