10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கவனஈர்ப்பு பேரணி

கோவை: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் கோவையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.


கோவை: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் கோவையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. 



நியாய விலை கடைகளில் ஆய்வு என்ற பெயரில் பல்துறை அலுவலர்கள் மாமூல் பெறுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும், விற்பனையாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், கட்டுனர் இல்லாத நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளருக்கு 1,500 கூடுதல்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கையை மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து வ.உ.சி., மைதானம் வரை பேரணியாக சென்றனர். இதில், 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



இது குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "தேனி, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மூலம் முதலமைச்சரிடம் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். தமிழக அரசு தங்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், மாநில சங்கத்தின் ஆலோசனைப்படி செப்டம்பர் மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், இவ்வாறு தெரிவித்தார். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...