கோவையில் மின்னணு கழிவுகளை அகற்ற பிரத்யேக தொட்டி அறிமுகம்

கோவை: கோவையில் மின்னணு கழிவுகளை அகற்ற பிரத்யேக குப்பை தொட்டி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கோவை:  கோவையில் மின்னணு கழிவுகளை அகற்ற பிரத்யேக குப்பை தொட்டி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பப்படுகிறது. இருப்பினும், குப்பை மேலாண்மை என்பது மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடும் சவாலாக உள்ளது.



இந்நிலையில், வார்டு எண். 22-ல் உள்ள பி.எஸ்.என்.எல். பூங்காவில் மின்னணு கழிவுகளை அகற்றுவதற்கென பிரத்யேக குப்பை தொட்டியை 'க்ரீன் எரா ரீசைக்லர்ஸ்' நிறுவனம் மாநகராட்சியோடு இணைந்து அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து, க்ரீன் எரா ரீசைக்லர்ஸ் நிறுவனத்தின் பிரசாந்த் ஓமனக்குட்டன் கூறுகையில், "ஈ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகளை அப்புறப்படுத்துவதும், மறுசுழற்சி செய்வதும் உலக அளவில் கடும் சவாலாக உள்ளது. கோவை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் மின்னணு கழிவுகள் மிக அதிகமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பதிப்புகள் ஏராளம். அவற்றை முறையாக மறுசுழற்சி செய்யவேண்டியது அனைவரின் பொறுப்பு. 

எனவே, மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்காக பிரத்யேக தொட்டியை அறிமுகம் செய்துள்ளோம். மாநகராட்சியோடு இணைந்து நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் இவை அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், சேகரிக்கப்படும் மின்னணு கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படும்," என்றார்.



முதற்கட்டமாக, பி.எஸ்.என்.எல். பூங்காவில் வைக்கப்பட்டுள்ள இந்தத் தொட்டியை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு, அதன் செயல்முறை குறித்து ஆய்வு செய்தார். மாநகராட்சி அதிகாரிகள், பாரதி பார்க் சங்கத்தினர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...