வால்பாறையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி., வேலுமணி

கோவை: வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கோவை: வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கடந்த சில நாட்களாக வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், தற்காலிகமாக கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வால்பாறைக்கு சென்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனை, வாழைத்தோட்டம் ஆறு உள்ளிட்டவற்றையும் அவர் பார்வையிட்டு, நிவாரண பணிகளை விரைவாக நடத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வால்பாறை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அப்போது, வீடுகளை இழந்தவர்களுக்கு விரைவில் புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். அமைச்சருடன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உட்பட அரசு துறை அலுவலர்கள் கட்சி நர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல, வால்பாறையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆனைமலை ஜாமாத் சார்பாக மக்களுக்கு உணவு மற்றும் குடீநீர் வழங்கப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...