கேரளாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க முடிவு

கேரள மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருவனந்தபுரத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருவனந்தபுரத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால் 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல, கொச்சி சர்வதேச விமான நிலையமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ள விமான நிலையம், நாளை முதலே செயல்பாட்டிற்கு வருகிறது. எனவே, கொச்சி விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள், திருவனந்தபுரம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், திருவனந்தபுரத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். மேலும், கோவை, திருவனந்தபுரம், கோழிக்கோடு வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்காக இந்த சேவை வழங்கப்படுவதாகவம், திருவனந்தபுரத்தில் வந்து செல்லும் 9 வெளிநாட்டு விமானங்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...