தொடர் மழையால் வால்பாறை பகுதி முற்றிலும் சேதம் : முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு அரசியல் கட்சிகள் உதவி

கோவை : கனமழையினால் வீடுகளை இழந்துள்ள பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அரசியல் கட்சிகள் நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி வருகின்றன.

கோவை : கனமழையினால் வீடுகளை இழந்துள்ள பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அரசியல் கட்சிகள் நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி வருகின்றன.

வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மிக கனத்த மழையால் வால்பாறை வாழைத்தோட்டம், சிறுவர்பூங்கா, காமராஜர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றுவெள்ளம் வீட்டில் புகுந்து அதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொருட்கள் மற்றும் உடமைகள் சேதமடைந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 



வால்பாறை வட்டாட்சியாளர் சியாமளாதேவி மற்றும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேணி, தீயணைப்புத்துறையினர் ஆகியோரின் முயற்சியால், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு, உடை, பெட்சீட், மற்றும் குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார செவிலியர்களின் மூலம் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 



மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, பல்வேறு தரப்பினர்களும், அரசியல் கட்சியினரும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். தி.மு.க., மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 மூட்டை அரிசியை வால்பாறை வட்டாட்சியரிடம் வழங்கினர். இதேபோல, கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பாகவும், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...