கேரளாவில் உள்ள 11 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் : பொதுமக்கள் அச்சம்

கேரள: கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், அங்குள்ள 11 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கேரள: கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், அங்குள்ள 11 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

வரலாறு காணாத அளவில் மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் சீர்குலைந்து போயுள்ளது. இதுவரை மழை தொடர்பான விபத்துக்களில் மட்டும் 320-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு மழை தொடர்வதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 



இந்த நிலையில், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் காசர்கோட் மாவட்டங்களைத் தவிர பிற 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே, மீட்புக் குழுவினரும், அதி விரைவு படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, கேரள மாநிலம் டைட்டானியம் சந்திப்பு - பத்தனம்திட்டா வழியிலான வண்டிப் பெரியார் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கோட்டயம், சபரிமலை, குமுளி, இடுக்கி பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சேதமடைந்த சாலையை சீர் செய்யும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...