தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நாளை முதல் மழையின் அளவு குறையும்

தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை நாளையுடன் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை நாளையுடன் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 8-ம் தேதியில் இருந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவை இந்த மழை புரட்டிப் போட்டுள்ளது. அனைத்து மாவட்டங்ளும் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றன. கனமழையினால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழையின் கோரப் பிடியில் இருந்து மீண்டு வர முடியாமல் கேரள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதே போல, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 

கேரளா மாநிலம் (இடுக்கி), கர்நாடகம் (குடகு) மற்றும் தமிழகம் (நீலகிரி, வால்பாறை) ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு நாளை (ஆக.,19) முதல் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...