கோவையில் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி சேதம்

கோவை: கார் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட தீவிபத்தில், பத்துக்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

கோவை: கார் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட தீவிபத்தில், பத்துக்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமான ஆட்டோ கேரேஜ் விளாங்குறிச்சி பாலாஜி நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. கார்களை சர்வீஸ் செய்யும் இந்த கடையில் வழக்கம்போல ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.



அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள் அங்கு செல்வதற்குள் திடீரென தீ வேகமாக பரவி அருகில் உள்ள கார்கள் மீதும் பற்றி எரிய ஆரம்பித்தது.

இதனால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேர போராதடத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கார்களில் உள்ள பேட்டரியில் இருந்து வெளியான மின் கசிவினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...