திருப்பூரில் பாயும் நொய்யல் ஆற்றை பார்வையிட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: திருப்பூரில் மழை காரணமாக நிரம்பி உள்ள குளங்களையும், நொய்யல் ஆற்றையும் கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர்: திருப்பூரில் மழை காரணமாக நிரம்பி உள்ள குளங்களையும், நொய்யல் ஆற்றையும் கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு ஆறுகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. அதேபோல, கோவையில் தொடங்கி திருப்பூர் வழியாக கரூர் சென்றடையும் நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.



இந்நிலையில், மழை நீர் தேங்கி உள்ள ஆண்டிபாளையம் குளம் மற்றும் நொய்யல் ஆற்றினை கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்., ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் முழுவதுமாக நிரம்பி உள்ளது. நொய்யல் ஆற்றில் 1,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் ஏற்பட்டால் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடைப்புகள் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ளுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்.



Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...