கோவையில் இருந்து அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தலைமையில் கேரளாவிற்கு புறப்பட்ட நிவாரணப் பொருட்கள்

கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் கோவையிலிருந்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அனுப்பப்பட்டது.


கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் கோவையிலிருந்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அனுப்பப்பட்டது.

கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை பிற மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. 



இந்நிலையில், கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாநகராட்சிகளின் மூலம் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான

42 அத்தியாவசிய பொருட்கள் 21 லாரிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டது. இதனை தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக, கடந்த 1ஆம் தேதி சுந்தராபுரம் ஆடி கார் மோதிய விபத்தில் உயிரிழந்த 6 பேருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி, கட்சி சார்பில் தலா ரூ. 6 லட்சம், காயமடைந்த ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியை அமைச்சர் வழங்கினார். இதில், துணை சபாநாயகர் ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், கனகராஜ், ஒ.கே.சின்னராஜ், பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



பின்னர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகள் அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அதிகமான பாதிப்பு காரணமாக தமிழக சுகாதாரத்துறை, கால்நடை துறை சார்பில் மாநில எல்லையோரத்தில் செய்ய வேண்டிய பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கும் மேல் நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு கோவையிலிருந்து அனுப்பப்படுகிறது.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன. தற்போது 21 வாகனங்களில் உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள், துணிகள் என அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும்.



கேரள மக்கள் மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன். கேரள மாநிலம் இந்தப் பாதிப்பில் இருந்து கண்டிப்பாக மீண்டு வரும். தொடர்ந்து தமிழகம் உதவி செய்யும். மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் வால்பாறை, பொள்ளாச்சியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகளும் நடந்து வருகிறது. பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு உடனடியாக வீடு கட்டித்தரப்படும், இவ்வாறு தெரிவித்தார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...