கேரள வெள்ளத்தில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவும் கூகுள்

கேரள: மழை மற்றும் வெள்ளத்தால் காணாமல் போனவர்களை தேடுவதற்காகக் கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கேரள: மழை மற்றும் வெள்ளத்தால் காணாமல் போனவர்களை தேடுவதற்காகக் கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கேரளாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மாநிலமே தனித்தீவு போல காட்சியளித்து வருகிறது. வெள்ளத்திலிருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இந்த மழை வெள்ளத்திற்கு 320-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் காணாமல் போகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

 

இந்த நிலையில், வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் நிலையை அறிந்துகொள்வதறக்க கூகுள் இந்தியா நிறுவனம், பேரிடர் உதவி இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் உள்ள கூகுளின் இணையத் தேடுதல் பக்கத்திலேயே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் அளித்துள்ள goo.gl/WxuUFp என்ற தரவுத்தளத்தில் சென்று அங்கு வழங்கப்பட்டுள்ள இரு தேர்வுகளைப் பயன்படுத்தி எளிமையாகக் கண்டுபிடிக்கலாம். ஒன்று ஒருவரைப் பற்றி தேட வேண்டும், மற்றொன்று யாரைப் பற்றியாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதாகும். 

நீங்கள் யாரைத் தேட விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரை அதில் பதிவு செய்தால், அந்தப் பெயரை ஒத்து இருக்கும் அனைத்தும் பெயர்களும் பரிந்துரைக்கும் அதில் அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று நீங்கள் மற்றவரின் நிலை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், அதில் இருக்கும் அடுத்த ஆப்சனை கிளிக் செய்து நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டியவரின் பெயரைப் பதிவிட்டு அவரைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கலாம். 

இது குறித்து கூகுள் இந்தியா நிறுவனம் தங்களது டுவிட்டரில், 'நாங்கள் எப்போது கேரள மக்களுடன் துணை நிற்போம்’ என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளனர். 

இதேபோன்ற முறையைக் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...