கேரளாவிற்கு மேலும் ரூ. 5 கோடியை வெள்ள நிவாரணமாக அறிவித்தது தமிழக அரசு

கேரளா: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழக அரசு ஏற்கனவே ரூ. 5 கோடி வழங்கியுள்ள நிலையில், மேலும் ரூ. 5 கோடியை வெள்ள நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழக அரசு ஏற்கனவே ரூ. 5 கோடி வழங்கியுள்ள நிலையில், மேலும் ரூ. 5 கோடியை வெள்ள நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் இதுவரை பெய்த மழை மற்றும் வெள்ளத்திற்கே மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து, மழை பெய்து வருவதால் இயற்கையின் பிடியில் இருந்து மீண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, தனித் தீவுகள் போல காட்சியளிக்கின்றன. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. தமிழக அரசு சார்பில் கடந்த 10-ம் தேதி முதற்கட்டமாக ரூ. 5 கோடியை நிவாரண உதவியாக வழங்கியது. இந்த நிலையில், அங்கு தொடர்ந்து, ஏற்பட்டு வரும் இயற்கை பேரிடர்களால், மேலும் ரூ. 5 கோடி நிவாரணமாக இன்று (ஆக.,18) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம், அண்டை மாநிலமான கேரளாவிற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 10 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

அதோடு, 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால்பவுடர், 15,000 லிட்டர் உயர் வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் (UHT), வேட்டிகள், கயிலிகள், 10,000 போர்வைகள், ரூ. 1 கோடி மதிப்பிலான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவர்கள் மற்றும் கால்நடைக் குழுக்களையும் தமிழக அரசு உடனடியாக கேரளாவிற்கு அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, தெலுங்கானா மாநில அரசு சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளின் சார்பில் தலா ரூ.10 கோடியை வெள்ள நிவாரணமாக வழங்கியுள்ளன. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...