கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய பாலாஜி பெங்களூரூவில் கைது : 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

கோவை: கோவை அருகே கடந்த மாதம் 220 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி பாலாஜியை, பெங்களூரூவில் வைத்து பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை அருகே கடந்த மாதம் 220 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி பாலாஜியை, பெங்களூரூவில் வைத்து பீளமேடு போலீசார் கைது செய்தனர். 

கடந்த மே மாதம் 11-ம் தேதி கோவை - அவினாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த ஜீப்பை ஆய்வு செய்ததில், சிறுசிறு பண்டல்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சாவை கடத்தி வந்த தேனி கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் வனராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் வசித்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கோவை பாலாஜி என்பவர் கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. 



மேலும், பாலாஜியின் மனைவியான சந்தியா மற்றும் தோழி நிஷா ஆகியோருடன் இணைந்து பாலியல் தொழிலுக்கு இளம் பெண்களை ஈடுபடுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீஸார் பாலாஜி மற்றும் சந்தியா, நிஷா ஆகியோரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். 

இதனிடையே, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 216 கிலோ கஞ்சா கடத்தியதாக ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், ராமநாதபுரம் பகுதியில் 35 கிலோ கஞ்சா கடத்தியதாக ராமநாதபுரம் காவல்நிலையத்தில் மற்றொரு வழக்கும், வடவள்ளி காவல்நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.



இந்த நிலையில், பாலாஜியை பெங்களூரில் வைத்து பீளமேடு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரிக்கும் பட்சத்தில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு உடந்தையாக யாரேனும் முக்கிய புள்ளிகள் உள்ளனரா என்பது குறித்தும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி, ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கில் பல முறை கைது செய்யப்பட்டுள்ளதும், கோவையில் மட்டும் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது வெளியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, கோவை ஆறாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாண்டி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாலாஜியை, வருகிற 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...