கேரளாவிற்கு 2.8 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பிய தெற்கு ரயில்வே

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக 2.8 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்களின் மூலம் தெற்கு ரயில்வே அனுப்பி வைத்துள்ளது.


கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக 2.8 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்களின் மூலம் தெற்கு ரயில்வே அனுப்பி வைத்துள்ளது.



தென்மேற்கு தீவிரமடைந்துள்ள கேரளாவில் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்துப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். 

இந்த நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக 2.8 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்களின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவசரகாலப் பொருட்களாக அனுப்பி வைக்கப்படும் இந்த குடிநீரானது, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. மேலும், ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய 10,000 பெட்டிகளும் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் பல்லூர் பிளான்ட்டில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் பாட்டில்கள் அடங்கிய 15,000 பெட்டிகளில், தலா 660 பெட்டிகள் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 12695 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கேரளா அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, தேவைப்படும் இடங்களுக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...