கோவை : பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

மேட்டுப்பாளையத்தில் பெருக்கெடுத்தோடும் பவானியாற்றால் பாதிக்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

கேரள காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த 11-ம் தேதி நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் நீர், அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு 40,000 முதல் 50,000 கனஅடி வரை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனையடுத்து, வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் வசித்து வரும் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இம்முகாம்களில் தங்கியுள்ள மக்களை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, கரைபுரண்டோடும் பவானியாற்றையும், அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சருடன், கோவை மாவட்ட ஆட்சியர் த.நா., ஹரிஹரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே. சின்னராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.