திருவனந்தபுரம்: கேரளாவில் மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 167-ஆக உயர்ந்த நிலையில் இன்று மாலை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி கேரளா செல்கிறார்
திருவனந்தபுரம்: கேரளாவில் மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 167-ஆக உயர்ந்த நிலையில் இன்று மாலை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி கேரளா செல்கிறார்.
கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பேருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 164 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
தற்போதும் அங்கு மழை பெய்துவருவதால் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். 21 குழுக்களாக கப்பற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈட்டுப்பட்டுள்ளனர். மேலும் கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், வெள்ள பாதிப்புகளை தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக இன்று மாலை கேரளா செல்கிறார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்குப்பிறகு பிரதமர் கேரளா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.