கோவையில் வெவ்வேறு இடங்களில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

கோவை: கோவையில் வெவ்வேறு பகுதிகளில் மூன்று பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் வெவ்வேறு பகுதிகளில் மூன்று பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சித்ரா பகுதியில் இருந்து 94 என்ற இலக்கமிட்ட அரசு பேருந்து ஒன்று காந்திபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. 

பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். அந்த பேருந்து மணி மேல்நிலைப்பள்ளி சிக்னல் அருகே சென்ற போது அங்கிருந்த சிலர் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.இந்த தாக்குதலில் பேருந்தின் நடத்துனர் கைலாசம் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 



இதே போல், ஒண்டிப்புதூர் பகுதியில் இருந்து, காந்திபுரம் நோக்கி எஸ்.1 என்ற இலக்கமிட்ட பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது அதன் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணியளவில் 14 சி என்ற இலக்கமிட்ட ஈஷா யோக மையம் செல்லும் பேருந்து ஆலாந்துறை அடுத்த பூளுவப்பட்டி வந்தபோது மர்ம நபர்கள் பேருந்தின் மீது கல்வீசி தாக்கினர். இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதமடைந்து.



பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி அருகே 13பி என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...