பில்லூர் அணையில் இருந்து 57,000 கன அடி நீர் வெளியேற்றம்: நீரில் மூழ்கி தத்தளிக்கும் மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து இதுவரை இல்லாத வகையில் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டுப்பாளையத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து இதுவரை இல்லாத வகையில் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டுப்பாளையத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 



தமிழக - கேரள எல்லையோரத்தில் உள்ள அடர்ந்த மலைக்காட்டின் நடுவே கடந்த 1968-ம் ஆண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது.

இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக கேரளத்தின் மலைக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகள் உள்ளன. கடந்த இருவார காலத்திற்கும் மேலாக கேரளா மற்றும் நீலகிரி மலைக்காடுகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பில்லூர் அணை கடந்த 11-ம் தேதி அதன் முழு கொள்ளளவு நீர்மட்டமான நூறு அடியை எட்டி நிரம்பியது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கான நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானியாற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 14,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், கேரளாவில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தபடி இருந்தது.

நேற்று (வியாழக்கிழமை) காலை இருபதினான்காயிரம் கன அடி, மாலை நாற்பதாயிரமாக கன அடியாக உயர்ந்தது. 

இதனால் பவானியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்த வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது, பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 



இந்நிலையில், இன்று காலை பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரித்து வினாடிக்கு 57,000 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.

இதனால் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததோடு சாலைகள் தரைப்பாலங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



 நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் வருவாய் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பில்லூர் அணை கட்டி ஐம்பது ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு மட்டுமே அணை நிரம்பி வினாடிக்கு நாற்பதாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதுவே அணையில் இருந்து அதிகபட்சமாக வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவாக இருந்த நிலையில் தற்போது 57,000 கன அடி வெளியேறுவதால் இதுவரை இல்லாத வரலாறு காணாத வகையில் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீரின் வேகம் மற்றும் சகதிகள் காரணமாக பில்லூர் அணையின் நீர் மின் உற்பத்தி மோட்டார்கள் பழுதடைந்து விடும் என்பதால் இங்கு தினசரி உற்பத்தி செய்யப்பட்டு வந்த நூறு மெகா வாட் மின் உற்பத்தி பணிகளும் தடைபட்டுள்ளது. 

மழை ஓய்ந்தால் மட்டுமே நிலைமை சீரடையும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...