முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு : தமிழக அரசு நாளை விடுமுறை அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது.


முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. 

நோய் தொற்று காரணமாக கடந்த 2 மாதத்திற்கும் மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமரும், பா.ஜ.க., மூத்த தலைவருமான வாஜ்பாய் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (ஆக.,16) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், 3 முறை பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...