நிலச்சரிவு காரணமாக வால்பாறை - பொள்ளாச்சி சாலை முற்றிலும் துண்டிப்பு

கோவை: வால்பாறையில் வெளுத்தும் வாங்கும் மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் வால்பாறை - பொள்ளாச்சி இடையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

கோவை: வால்பாறையில் வெளுத்தும் வாங்கும் மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் வால்பாறை - பொள்ளாச்சி இடையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்றில் இருந்து அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் மட்டுமின்றி, சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, வால்பாறை அரசு போக்குவரத்து பணிமனையின் உள்ளே வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. மேலும், பொள்ளாச்சி - வால்பாறை இடையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கொண்டு அவ்வழியாக வாகனத்தை இயக்க முடியாத அளவிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதோடு, அதிரப்பள்ளி வழியாகக் கேரள செல்லும் சாலையிலும் தடைபட்டுள்ளது. 

மழை வெள்ளத்தால் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன், வருவாய் துறை அலுவலர், எம்.எல்.ஏ., கஸ்தூரி வாசு உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, வீடுகளை இழந்து தவிப்பவர்களை, தற்காலிக முகாம் அமைத்து, வட்டாட்சியர் சியாமலா தேவி மற்றும் காவல் ஆய்வாளர் திரிமேணி ஆகியோர் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். 

இந்த சூழலில், மழை நீரால் சூழ்ந்த வீடுகளில் இருந்த மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மனம்பள்ளி எஸ்டேட் பகுதியில் வேளாங்கண்ணி (41) என்ற பெண் மழை வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். இதேபோல, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சோலையாறு அணையின் பவர்ஹவுஸ் பொறியாளர் விக்னேஷ்வரன் (35) மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்தார். இதன்மூலம், இன்று ஒரே நாளில் மழை தொடர்பான விபத்தில் சிக்கி வால்பாறை வட்டத்தில் மட்டும் 2 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...