கோவை: அறம் அறக்கட்டளை சார்பில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு திட்டம் செல்வபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கப்பட்டது.
கோவை: அறம் அறக்கட்டளை சார்பில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு திட்டம் செல்வபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கப்பட்டது.

அடுத்த மூன்று மாதங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட 26 பள்ளிகளில் பயிலும் 6500 மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இன்றைய நிகழ்வில், காணொளி காட்சிகள் மற்றும் வகுப்பறை பாடங்கள் மூலமாக மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதாரப் பணிகள் குறித்து மாணவிகளிடையே விளக்கப்பட்டது.

மாணவிகள் சந்திக்கும் பிரச்சனை மற்றும் மாதவிடாய் காலத்தில் தேவையான உணவுகள் குறித்து உளவியல் நிபுணர் இந்திரா ராணி மாணவிகளிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்,150-க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து அறம் அறக்கட்டளையின் நிறுவனர் லதா சுந்தரம் கூறுகையில், "பெண் குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவிடாய் காலத்தில் 50 சதவீத மாணவிகள் உள்ளாடைகள் மட்டும் அணிவது எங்கள் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
அதனால், மாதவிடாய் காலத்தின் போது அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை குறித்து இன்றைய நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட 26 பள்ளிகளிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம்." என்றார்.