வால்பாறையில் மழை வெள்ளத்தில் சிக்கி பெண் பலி; போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு

கோவை: வால்பாறையில் ஏற்படுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

கோவை: வால்பாறையில் ஏற்படுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்றில் இருந்து அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.



அங்குள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மண் சரிவு தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



அதே நேரம் பொள்ளாச்சி பணிமனையில் இருந்து வால்பாறைக்கு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. வால்பாறை சாலையில் தற்போது அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே கார், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

மழை வெள்ளத்தால் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த சூழலில், மழை நீரால் சூழ்ந்த வீடுகளில் இருந்த மக்களை மீட்கும் பணியில் இன்று காலை தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மனம்பள்ளி எஸ்டேட் பகுதியில் வேளாங்கண்ணி (41) என்ற பெண் மழை வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.



தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...