கோவை: நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் இன்று காலை முதல் சிறுவாணி அணை நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 49.53 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணை முழுவதுமாக நிரம்பியது. தற்போது நிரம்பி அணையில் இருந்து நீர் வெளியேறத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் மட்டும் அப்பகுதியில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்றைய (15-ம் தேதி) நிலவரப்படி அங்கு 122 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.