பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு பாதிப்புகளை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கோவை: மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு பாதிப்புகளை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேற்று (15-ம் தேதி) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு பாதிப்புகளை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேற்று (15-ம் தேதி) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கேரளா மற்றும் நீலகிரி மலைக்காடுகளில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் விநாடிக்கு 34,000 ஆயிரம் கன அடி வரை வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாய விளைநிலங்கள், சாலைகள், தரைப்பாலங்கள், குடியிருப்புகள் போன்றவை நீரில் மூழ்கி அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட காந்தவயல், காந்தையூர், ஆலூர், உளியூர் உள்ளிட்ட பல்வேறு மலை அடிவார கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் லிங்காபுரம் பகுதிக்கு நேரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.



பின்னர், வருவாய்த் துறை, காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். லிங்காபுரம் பகுதியில் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 20 அடி உயர் மட்டபாலம் வெள்ளப் பெருக்கால் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால், இப்பகுதி பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் தினசரி பரிசல் மூலமே ஆற்றினை கடந்து நகரபகுதிக்கு வந்து செல்வதால் காந்தையாற்று பாலத்தை 20 அடியில் இருந்து 30 அடியாக உயர்த்திக் கட்டி தருமாறு ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...