கோவை: சாதாரண மக்கள் கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டத்தில், அரசின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறிய மாவட்ட ஆட்சியர் பெரும்பாலான வார்த்தைகள் ஆங்கிலத்தில் பயன்படுத்தியால் அங்கிருந்தவர்களை அதிருப்தியடைந்தனர்.

72-வது சுதந்திர தினத்தையொட்டி தொண்டாமுத்தூரை அடுத்த இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட நேரத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாக கோவை மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் கலந்து கொண்டார்.

இதில், அப்பகுதியைச் சேர்ந்த வயதான ஆண், பெண் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே, ஒரு மணிநேரம் தாமதமாக தொடங்கிய கிராம சபைக் கூட்டத்தால் பொதுமக்கள் அதிருப்தியடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உரையும் அவர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.
கூட்டத்தில் பேசிய ஆட்சியர் த.நா. ஹரிஹரன், பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தினார். கிராமப் பகுதிகளில் நடைபெறும் இது போன்ற கிராம சபைக் கூட்டத்தில் அதிகளவில் வயதான பாமர மக்களே கலந்து கொண்டிருப்பதால், ஆட்சியர் ஆங்கிலத்தில் கூறிய வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் குழம்பி இருந்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் எந்தவித கேள்விகளையும் கேட்க முடியாமல் பொதுமக்கள் அமைதியாகவே கடைசி வரை அமர்ந்திருந்தனர்.

"ஒவ்வொரு முறையும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் ஏமாற்றத்திலேயே முடிந்துள்ளன. இதில் பங்கேற்பதன் மூலம் எங்களது நேரமே விரயமாகிறது," இவ்வாறு கூறுகிறார் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர்.
இதைத்தொடர்ந்து, செம்மேடு காந்தி காலனியின் பாதாள சாக்கடை சுத்தம் செய்ய வேண்டும், தெருவிளக்குகள், கழிப்பறைகளில் விளக்குகள், தரமற்ற நூலகங்கள் மற்றும் பாலங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.